பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு பாட்டாளி மக்கள் தொண்டர்களும் கவரிமான் தான். அவர்கள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு கொள்கை தான் முக்கியம். அவர்களுக்கு விலையாக கோடி பணத்தை கொட்டினாலும் கூட அதை இடது கையால் வீசி எறிந்து விடுவார்கள். அவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படும் பணத்தை விட தங்களுடைய இறப்புக்குப் பிறகு தங்கள் மீது போர்த்தப்படும்பாமக கொடி தான் தங்களுக்கு பெரிது என்று நினைக்கக் கூடியவர்கள் பாட்டாளிகள். பாட்டாளிகளை மயக்கும் வார்த்தைகளால் கவர்ந்து விடலாம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கும், பிள்ளை பிடிக்கும் கூட்டத்திற்கும் தெரியாது.
முதலில் உங்களுடைய குடும்பத்தை கவனியுங்கள். அடுத்து உங்களுடைய தொழிலை பாருங்கள் அதன்பின் கட்சி பணிகளை கவனியுங்கள் என்பது தான் பாட்டாளிகளுக்கு நான் நடத்தியுள்ள பாடம். விசுவாசம் என்பதன் அர்த்தம் பாட்டாளிகள் ரத்தத்தில் மனதிலும் ஓடுகிறது, கொள்கை இல்லாத கூட்டங்களை அவர்கள் கால் தூசுக்கு கூட மதிக்க மாட்டார்கள் .அப்படிப்பட்ட பாட்டாளிகளை பறித்து விடலாம் என்று நினைக்கும் என்று பொய்யுரைப்பதையே பிழைப்பாகக் கொண்ட கூட்டம் நினைத்தால் அவர்களுக்கு ஆறாவது அறிவு வளரவில்லை என்று தான் அர்த்தம். அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு பாட்டாளியும் அளிக்கும் பதில் என்னவென்றால் “போங்கடா. போக்கத்தப் பசங்களா” என்பது தான் எனக் கூறியுள்ளார்.