Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நியாயம்…? எலான் மஸ்க்கை(யும்) மடக்கிய கஸ்தூரி…. வெய்ட்டிங்…!!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அரசியல் என சூரியனுக்குக் கீழே இருக்கும் அனைத்தையும் குறித்து விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி, எலான் மஸ்க்கையும் விட்டுவைக்கவில்லை. ட்விட்டர் பறவை விடுவிக்கப்பட்டது என சொல்லிவிட்டு சந்தா கட்டச் சொன்னால் என்ன நியாயம்? இலவசமாக இருந்தால்தான் அது பேச்சு சுதந்திரம் என மஸ்க்கை tag செய்து விமர்சித்திருக்கிறார். மஸ்க் ரிப்ளைக்காக வெய்ட்டிங்.

Categories

Tech |