Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும் நிலவின் தோற்றம் பற்றி அறிவதில் ஆராய்ச்சியாளர்களின் தேடல் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நிலவு உருவாக பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும் என கூறப்பட்டிருக்கின்ற நிலையில் புதிய ஆய்வு ஒன்று அதனை மறுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த புதிய ஆய்வின்படி பூமி மற்றும் செவ்வாய் கிரகம் அளவுள்ள தியியா என்னும் திடப்பொருள் ஒன்று பெரிய அளவில் மோதி இருக்கின்றது எனவும் அதனை தொடர்ந்து உடனடியாக நிலவானது அதனுடைய சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்காக துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் கணினியை பயன்படுத்தி தூண்டுதல்களை உருவாக்கி நிலவின் தோற்றம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இந்த ஆராய்ச்சியில் 450 கோடி வருடங்களுக்கு முன்பு என்ன நடந்திருக்கும் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக வெவ்வேறு மோதல்கள் கோணங்கள், வேகம், கோளின் சுழற்சி, கோளின் நிறைகள் மற்றும் பிற விஷயங்கள் முன்வைத்து நூற்றுக்கணக்கான மோதல் நடத்தப்பட்டு அதன் முடிவு கணினி வழியே தூண்டுதலாக பெறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்புகளின் பெரிய அளவிலான மோதல் ஆனது நிலவின் நிறை மற்றும் இரும்பு பொருட்களை உள்ளடக்கிய அதனையொத்த மற்றொரு செயற்கைக்கோளை பூமியின் ரோச் எல்லைக்கு வெளியே அதன் சுற்றுவட்ட பாதையில் உடனடியாக நிலை நிறுத்த செய்ய முடியும் என தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் செயற்கைக்கோள்கள் கூட இந்த ரவுண்ட்ஸ் எல்லையை கடந்த பின் தப்பி பிழைத்து நிலையான சுற்றுவட்ட பாதையில் பயணம் மேற்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி நாசா அமைப்பு தெரிவிக்கும்போது நிலவைப் பற்றி அறிந்து கொள்வது என்ற விஷயங்களை கடந்து இந்த ஆய்வுகளானது தற்போது நாம் வாழக்கூடிய தன்மை கொண்ட ஒன்றாக நமது சொந்த பூமி ஆனது எப்படி உருமாறியது என்பதை பற்றிய விவரங்களை நோக்கி நம்மை நெருங்கி அழைத்து சென்றிருக்கின்றது எனக் கூறியுள்ளார். நிலவைப் பற்றி புது புது கோட்பாடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் மறுபுறம் நிலவுக்கு மீண்டும் செல்வதற்கு மனிதர்கள் திட்டமிட்டு வருகின்றார்கள் இதனால் நிலவின் தோற்றம் பற்றிய புதிரை விடுவிப்பதில் நாம் இன்னும் சற்று நெருங்கி இருக்கின்றோம்.

Categories

Tech |