நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க விஜய் வந்த ரெட் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் தன் நடிப்பால் கவர்ந்தவர். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்திலிருந்து அண்மையில் அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு விஜய் வந்த விதம் குறித்து வைரலாகி வருகின்றது. சென்ற வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து பலரும் பேசி வந்தனர். பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து விஜய் சைக்கிளில் வந்தார் என பேசப்பட்டு வந்தது. அவர் வந்த சைக்கிளானது கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தைக் கொண்டதால் குறிப்பிட்ட ஒரு காட்சியை ஆதரிக்கிறார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விஜய் கருப்பு நிற மாஸ்க் அணிந்து சிவப்பு காரில் வந்திருந்தார். இதனால் இவர் குறிப்பிட்ட காட்சியை ஆதரிக்கிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சை உருவெடுத்துள்ளது. அது என்னவென்றால் நேற்று அவர் வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என இணையத்தில் பரவி வருகின்றது. விஜய் வந்த சிவப்பு நிற காருக்கு 2020 ஆம் வருடம் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதாம். இன்சூரன்ஸ் முடிந்த காரை விஜய் ஓட்டி வந்துள்ளார் என கருத்துக்கள் பரவி வருகின்றது. இன்சூரன்ஸ் முடிந்த காரை ஓட்டி வந்தது சட்டத்திற்கு புறம்பானது. இதற்காக இவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். இதுபோல, பிரபலங்கள் எது செய்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.