Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுறதுனே தெரில ? புலம்பவிட்ட தக்காளி விலை…. வேதனையில் விவசாயிகள் …!!

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தக்காளிக்கு நல்ல விலை கிடைகாததால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தக்காளி விளைச்சல் அதிகரித்து சூழலில் வெளிமாநில தக்காளி வருகை உள்ளிட்ட காரணத்தால் தேவை குறைந்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வாங்குவதற்கும் கூட யாரும் முன்வரவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உப்பு விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளன . தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக மரக்காணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 400 ரூபாய் வரை விற்ற  ஒரு முட்டை உப்பு, தற்போது 250 ரூபாய் வரை மட்டுமே விலை போவதால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Categories

Tech |