உடல்நலம் பாதித்த தன் 5 வயது மகன் ரிஷியை, சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியபிரதேசம் ஜவால்பூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணிக் கணத்தில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் (அல்லது) சுகாதார ஊழியர்கள் கூட சிறுவனுக்கு என்ன பிரச்சனை என பார்க்கவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் வைத்தே தாயின் மார்பில் சாய்ந்தபடி சிறுவன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சிறுவன் இறந்த பிறகும் சில மணி நேரங்கள் அந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது.
இது அந்த மாநிலத்தின் மோசமான சுகாதார உள்கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம் உள்ளூர்வாசிகள் இடையே ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அந்நேரத்தில் பணியிலிருந்த மருத்துவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவற்றில் மருத்துவரின் மனைவி முந்தையநாள் உண்ணாவிரதம் இருந்ததால் மறுநாள் மருத்துவமனைக்கு வர தாமதம் ஆனதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.