கஜகஸ்தானில் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை முன்னிட்டு அந்நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டின் பிரதமராக அஸ்கர் மாமின் என்பவர் உள்ளார். இவர் அண்மையில் எரி பொருட்கள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் கொந்தளித்த பொதுமக்கள் கஜகஸ்தான் நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தப் போராட்டம் அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான மேற்கு மங்கிஸ்டாவ் மற்றும் அல்மாட்டியில் வன்முறையாக மாறியுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள 2 நகரத்திலிருக்கும் மேயர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
இதனால் அந்நாட்டின் அதிபரான காசிம் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மேல் குறிப்பிட்டுள்ள நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.