செக் குடியரசு நாட்டின் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டின் பிரதமரான பீட்டர் பியலாவுக்கு வயது 57 ஆகும் . இந்நிலையில் இவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தனது வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக கூறினார். இது குறித்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தபடி எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன் ” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த நாட்டில் நேற்று கொரோனா பரிசோதனையில் ஒரே நாளில் 8,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் 39 ஆயிரத்து 610 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.