Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேச்சு பேசுறாரு… ட்விட்டருல பாருங்க…. மோகன்சி லாசரஸ்சை கைது செய்யுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின்  நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனாவில் மத்தை இழுத்து யார் சொன்னாலும் தவறு தான் எல்லாமே தவறு தான், மதத்தை இதுல இழுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இது வந்து இயற்கை பேரிடர். அதனால இதுல வந்து மதத்தை இழுப்பதற்கு, சிபிஎம் சொன்னாலும், காங்கிரஸில் சொன்னாலும், யார் சொன்னாலும், இது தவறான விஷயம் அந்த மாதிரி மதத்தை இழுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.

மோகன்சி லாசரஸ் தொடர்ந்து பிற மதங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தவர், இன்றைக்கு ஊசி போடக் கூடாது, செலுத்தக் கூடாது என்று சொன்னால்  என்ன அர்த்தம். இன்றைக்கு எத்தனையோ பேரை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை கைது செய்து இருக்கிறது.  பல பேரை கைது செய்திருக்கிறார்கள் உண்டா ? இல்லையா நாம் ? பார்த்து கொண்டு  இருக்கிறோம்.

ஏன் ஒரு சித்த மருத்துவரை கைது செய்தார்கள் போன வருஷம், இப்ப கூட சமீபத்தில் கைது பண்ணாங்க. நான் என்ன கேட்கிறேன்…  மோகன்சி லசரஸ் மீது நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுறீங்க. அவருடைய வீடியோ பாத்தீங்களா ? அந்த வீடியோவை பாருங்க என்னுடைய டுவிட்டர்ல கூட பகிர்ந்திருக்கிறேன். மிக மோசமாக பேசியிருக்கிறார்,

நாளைக்கு அத கேட்டு விட்டு அந்த மத நம்பிக்கை சார்ந்த சிலர், ஐயோ பைபிளில் சொல்லியிருக்கு என்று தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் உயிருக்கு யாரு உத்திரவாதம் கொடுப்பது ? மோகன் சி லாசரஸ் கொடுப்பாரா ? இது தான் விஷயமே, அப்போ தவறாக வதந்திகளை பரப்பி, மக்களை திசை திருப்பும், தூண்டி விடும் செயலில் இறங்கிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுல வந்து மதம் எல்லாம் பார்க்க கூடாது.  யாராக இருந்தாலும் மதம் பார்க்கக் கூடாது. இதில் மதம் ஒட்டுக்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால் அது வந்து ஒரு மிகப்பெரிய பேராபத்தில் தான் முடியும், பல உயிர்களை நாம் இழக்க நேரிடும். அதனால சிறுபான்மை மக்களுடைய….  குறிப்பாக கிறிஸ்தவ மக்களுடைய உயிர் காப்பதற்கு, மோகன்சி லாசரஸ்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுடைய, தமிழக காவல்துறையினுடைய கடமை என்று நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |