வாழ்க்கையின் வியாபாரம் செய்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.
வனிதா 3-வது திருமணமாக பீட்டர் பாலை மனது கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் இது சுமூகமாக முடிந்துவிட்டது. வனிதா தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால், குழந்தைகளுடன் கோவா சென்றார்.அங்கு பீட்டர் பால் மது அருந்தி கொண்டு, சண்டை போட்டதால் சென்னை திரும்பினர். இங்கு வந்து பீட்டர் பால் மது அருந்திக் கொண்டு, புகைபிடிப்பதுமாக இருந்தார். இது குறித்து வனிதா வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில்,
அவர் ஹார்ட் அட்டாக் நோயாளியாக இருந்துகொண்டு இப்படி புகை பிடிக்கலாமா ? மது அருந்தலாமா ? நான் ஏமாந்து விட்டேன். என்னால் சிரிக்க முடியவில்லை, நான் போன் செய்தால் போனை எடுப்பதில்லை. சுவிட்ச் ஆப் செய்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.இதனை பார்த்த ஒருவர் கஸ்தூரியிடம் கேட்டபோது , வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.
வீடியோ பார்த்த கஸ்தூரி, ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான் பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.