Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன மனுஷன்யா இவரு..! தன்னை அவுட் ஆக்கிய பும்ராவுக்கு கைதட்டிய பிஞ்ச்…. பாராட்டும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ…!!

யார்க்கரால் தன்னை அவுட் ஆக்கிய பும்ராவை பார்த்து கைதட்டிய ஆரோன் பிஞ்சுக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால், 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9:00 மணிக்கு மேல் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி 8 ஓவர் முடிவில் 90 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 (20) ரன்களும், பிஞ்ச் 31 ரன்களும்  எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 7.2 ஓவரில்4 விக்கெட்  இழந்து 92 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா 20  பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்.. இதன் மூலம் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது..

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த யார்க்கர் கிங் ஜஸ்பிரிட் பும்ரா குணமடைந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.. இந்த போட்டியில் அவர் 2 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்து ஒரு முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதாவது நேற்று நடந்த போட்டியில் தொடக்க வீரர் ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்..

பும்ரா தனது அற்புதமான யார்க்கர் பந்துவீச்சால் அவரை ஆட்டம் இழக்க செய்திருப்பார்.. அவுட் ஆனதற்குப் பின் அடுத்த நொடியே ஆரோன் பிஞ்ச்  பேட்டால் கைதட்டி பும்ராவை பாராட்டினார்.. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. பிஞ்சை பலரும் பாராட்டி வருகின்றனர்..

 

என்னதான் அவுட் ஆகி இருந்தாலும் அவரது சிறப்பான பந்துக்கு பாராட்டு தெரிவித்த அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.. களத்தில் அவுட் ஆனால்  ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சில வீரர்களுக்கு மத்தியில் இது போன்ற சம்பவங்களை ரசிகர்கள் பார்க்கும் போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.. அதேபோல ஸ்மித்துக்கும் ஒரு நல்ல யார்க்கர் பந்தை பும்ரா வீசியிருப்பார்.. அதில் அவர் தடுமாறி கீழே விழுந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ : 

 

Categories

Tech |