தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை துடைப்பம் கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “2024 மக்களவைத் தேர்தலுக்கு பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம் அணிவகுத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.