நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக அளவில் ஆர்வம் காட்டாததற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அவ்வளவு ஈடுபாடு காட்டாததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது அனைவரும் தற்போது பயன்படுத்தி வரும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.
இதன் மூலம் இணைய வழி விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சூர்யா ஏன் ஈடுபடவில்லை என கேட்டால், இதற்கு செலவிடும் பணத்தை வைத்து நான்கு ஏழை குழந்தைகளை படிக்க வைக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களால் மனதார பாராட்டப்பட்டு வருகிறது.