பெங்களூரூவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய டிராபிக் ஜாமை பொருட்படுத்தாமல் மூன்று கிலோமீட்டர் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். அன்று காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது டிராபிக் காரணமாக அவரால் மருத்துவமனைக்கு செல்ல தாமதமாகி கொண்டிருந்தது.
அறுவை சிகிச்சைக்கான நேரம் நெருங்கிய நிலையில் இனியும் டிராபிக் சரியாகப் போவதில்லை என்று உணர்ந்த மருத்துவர் சற்று யோசிக்காமல் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓட தொடங்கினார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மருத்துவமனைக்கு ஓடிச்சென்று மருத்துவமனையை அடைந்து குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையும் செய்து முடித்தார். இந்த செயலை பார்த்த பலரும் மருத்துவர் கோவிந்து நந்தகுமாருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் நோயாளியின் உயிர் முக்கியத்துவத்தை கருதி மருத்துவரின் இந்த செயல் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.