Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன மிரட்டுறாங்க…. முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.. 40 விழுக்காடு தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது..

பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தென்காசியை சேர்ந்த வெற்றிமாறன் என்பது தெரியவந்துள்ளது.. தென்காசி உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தன்னை தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கூறி  சிலர் மிரட்டுவதாக காவல்துறையிடம் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சர் இல்லம் இருக்கும் சித்தரஞ்சன் சாலையில் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கின்றனர்.. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Categories

Tech |