Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன மூடத்தனமான பேச்சு இது….? மீரா மிதுன் மீது எம்,எஸ்.பாஸ்கர் கண்டனம்….!!!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பெயரில் மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுனின் பேச்சுக்கு எம்எஸ் பாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாதி பெயரை சொல்லி பேசுவது கண்டனத்துக்குரியது. சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது, இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார். சாதனைக்கும், அறிவுக்கும், ஜாதிக்கும் என்ன சம்பந்தம்? மற்றவர்களின் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |