நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 34-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். அப்போது இந்தியை நாம் தேசிய மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பேசவேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்ற மொழியாகக் இந்தியை கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்று கூறினார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘உள்துறை அமைச்சரே! உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன் எங்கள் மீது இந்தியைத் திணிக்கிறீர்கள். நாங்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறோம், எங்கள் தாய் மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அர்ஜெண்டா என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.