ரஷ்யா நரகத்தின் கதவை திறந்தார்கள் என கூறப்படுகிறது. அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
ரஷ்யா கடந்த 1960-ம் வருடம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய வேண்டும் என எண்ணியது. இதற்காக 14 கிலோமீட்டர் அளவுக்கு சிபிரியா என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய குழியை தோண்டியுள்ளது. அதாவது ஒரு செல்போன் டவரில் இருந்து குதித்தால் கூட ஒரு சில நிமிடங்களில் நாம் தரையில் வந்து அடைந்து விடுவோம். ஆனால் ரஷ்யாவில் தோண்டப்பட்ட இந்த குழியில் விழுந்தால் 15 நிமிடங்கள் கழித்துதான் தரையை அடைய முடியும். இந்நிலையில் ரஷ்ய மக்கள் சிபிரியாவில் குழி தோண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் பூமிக்கு அடியில் நரகம் இருப்பதாகவும் குழியை தூண்டினால் சாத்தான்கள் வெளியே வந்துவிடுவார்கள் எனவும் ரஷ்ய மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்படி தோண்டும் போது திடீரென குழியின் வெப்பநிலை 1000 டிகிரிக்கும் மேல் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த குழிக்குள் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போன்று சத்தம் எழுப்பியுள்ளனர். மேலும் திடீரென ரஷ்ய அரசாங்கம் எந்த காரணமும் இன்றி குழி தோண்டும் பணியை நிறுத்தியுள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குழி தோண்டியவர்களுக்கு மட்டுமே தெரியும்.