Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ரொம்ப கொடுமை படுத்துறாங்க”…. “மூன்று நாளா எந்திரிக்க கூட முடியல”….. ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்….!!!!!!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினியாக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சீரியல்கள், படங்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகின்றார். இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை அடுத்து திரைப்படங்களில் நடித்தார். பின் தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அண்மையில் இந்த சீரியல் முடிந்தது.

தற்பொழுது ஜாக்குலின் உடல் எடையை குறைப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் ஜிம் பயிற்சியாளர் கொடுமைப்படுத்துவதாக காமெடியாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க. என்னால சுத்தமா முடியவில்லை, மூச்சு வாங்குது. வாந்தி வருது என்று சொன்னால் கூட கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். வாந்தி எடுத்துட்டு வாருங்கள் என கூறுகின்றார்கள். கேட்டா எல்லாம் நார்மல் தான் என்று சொல்றாங்க. என்னால மூன்று நாளா எழுந்திருக்க முடியல என அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/reel/ChNBe8tJ8Jo/?utm_source=ig_embed&ig_rid=146dfc89-5fa7-4860-bbba-74eedce58f63

Categories

Tech |