நடிகர் அஸ்வின் குமார் பல விமர்சனங்களை தாண்டி ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவை பெருக்கி வருகிறார்.
விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் பத்து படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு ஹீரோவிற்கு எப்படி வரவேற்பு கிடைக்குமோ அதைவிட அதிக வரவேற்பு கிடைத்ததுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்வின் மட்டுமில்லாமல் புகழ் உட்பட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வினுக்கு பல படவாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் கிடைத்தது. இதனால் அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்தப்படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்காக விழா ஒன்றும் நடத்தப்பட்டது. அந்த விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு மிகப்பெறிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கிஇருக்கிறேன். நான் கேட்டு தூங்காத கதை என்ன சொல்ல போகிறாய் கதை மட்டும் தான். அதன் காரணமாகத்தான் இப்படத்தில் நடிக்கிறேன் என்றார். இந்த பேச்சு சினிமா ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கடுப்பாக்கியுள்ளது. பலர் அஸ்வினின் இந்த பேச்சிக்கு கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒருபக்கம் அஸ்வின் குமார் எது செய்தாலும் அதை விமர்சிப்பதற்கென்ற ஒரு கூட்டம் உருவானது. அதெற்கெல்லாம் அந்த படவிழாவில் அவர் பேசிய பேச்சுதான் காரணம். இருப்பினும் மறுபக்கம் அவரை ஆதரிப்பதற்காக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. சில ரசிகர்கள் அஸ்வினை விமர்சிப்பதை எதிர்க்கவே அவரை தீவிரமாக ஆதரிக்க துவங்கினர் அவரின் ரசிகர்கள். கலவையான விமர்சனங்களை பெற்ற என்ன சொல்ல போகிறாய் படத்தைக்கூட அஸ்வின் ரசிகர்கள் கொண்டாடினர். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்களின் ஆதரவு ஒருபக்கம் இருந்துதான் வருகின்றது. இந்நிலையில் இவரை விடாது விமர்சிக்கும் ரசிகர்களின் காரணமாகத்தான் இவருக்கு ஒரு பக்கம் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பது பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.