மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒரு பக்கத்தில் சாப்பாடு பரிமாறபட்டு அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென்று திருமணத்திற்கு பட்டாசு வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டு திருமணமண்டபம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. அதற்காக பலரும் போராடி தீயை அணைத்தும், மேலும் தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனாலும் சில பொருள்களுக்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வளவு சம்பவங்களும் நடந்து கொண்டிருந்த போதும் அது ஏதோ ஒரு விளக்கு எரிவது போல வேடிக்கை பார்த்துக் கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஒரு சிலர் “பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்பது இதற்கு தான் பொருந்தும் போல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Wedding pandal catches fire. The guest is torn between checking it out and gobbling the delicious meal.#bhiwandi
pic.twitter.com/X2w28yKbRi— Musab Qazi (@musab1) November 29, 2021