மெக்கன்சியின் குழந்தைகள் பயின்று வந்த பள்ளியில் டென் ஜூவீட் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். இவர்கள் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து மெக்கன்சிக்கு அமேசான் நிறுவனத்தின் 4 % பங்குகளை ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மெக்கச்னியின் சொத்து மதிப்பு 59.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 4 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் மெக்கன்சி உலகின் 22-வது பணக்காரராகவும், உலகின் 3-வது பெண் பணக்காரராகவும் உயர்ந்துள்ளார்.
அதே சமயத்தில், தனது சொத்தில் பெரும்பங்கை மெக்கன்சி ஸ்காட் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனால், மெக்கன்சியின் தற்போதைய சொத்து மதிப்பு 28.90 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதனை அடுத்து ஜெப் பெசோசிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் மெக்கன்சி பள்ளி ஆசிரியரான டென் ஜுவீட் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். மெக்கன்சிக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளன. ஜெப் பெசோஸ் மூலம் 3 குழந்தைகளும் 1 குழந்தை தத்தெடுத்தும் வளர்த்து வருகின்றார். மேலும் ஜெப் பெசோஸ் விவாகரத்து பெற்றதையடுத்து இந்த 4 குழந்தைகளுக்கும் இருவரும் சமபங்கு காப்பாளர்களாக விளங்கி வருகின்றனர். மெக்கன்சியின் குழந்தைகள் பயின்று வந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து வந்தவர் டென் ஜூவீட். ஜெப் பெசோசிடமிருந்து விவாகரத்து பெற்றபின் டென் ஜூவீட்டை மெக்கன்சி திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், தனது 2-வது கணவரான டென் ஜூவீட்டிடமிருந்து விவாகரத்து கோரி மெக்கன்சி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்து மனு வாஷிங்டன் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசிடமிருந்து விவாகரத்து பெற்ற மெக்கன்சி ஸ்காட் தற்போது தனது 2வது கணவரான பள்ளி அறிவியல் ஆசிரியரிடமிருந்தும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ள சம்பவம் பேசுபொருளாகி வருகின்றது.