தலிபான்கள் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைப்பை உருவாக்கியவர் முல்லா உமர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காசநோயால் உயிரிழந்தார். தற்போது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா என்ற கார் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானது. அதனால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அந்த கார் ஒரு கிராமத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அந்த காரை இப்பொழுது தோண்டி எடுத்து காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.