Categories
தேசிய செய்திகள்

என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை – அமித்ஷா விளக்கம்!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.

இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் கேட்க மாட்டோம்,விருப்பம் இருந்தால் சில தகவல்களை தரலாம் என கூறியுள்ளார்.

என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, யாரையும் சந்தேகப்படும் நபர் என குறிப்பிடமாட்டோம் என்று கூறிய அவர், என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |