Categories
தேசிய செய்திகள்

என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு – ஜெகன்மோகன் ரெட்டி!

தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறையில் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கடந்த முறையைவிட கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனிடையே இன்று இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு ஒன்றை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது பரவலாக எழுப்பப்படும் குற்றச் சாட்டாகும். அத்துடன் இஸ்லாமியர்களை குறிவைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |