Categories
சினிமா தமிழ் சினிமா

என்றுமே அவர் சூப்பர் ஸ்டார் தான்!…. நடிகர் ரஜினிகாந்த் பற்றி மலரும் நினைவுகள்….!!!!

கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று திரையுலக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். காரணம் ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடிப்பதை விட, அவர் பேசும் டயலாக் மற்றும் ஸ்டைலை அதிகம் விரும்புகின்றனர். ரஜினி தன் ஆரம்ப காலத்தில் நடிக்க மட்டுமே வந்த நிலையில், திரை உலகில் கொஞ்சம் புகழ்பெற்ற பின்புதான் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசியல் வசனங்களை பேசி கலக்க ஆரம்பித்தார். தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் பாடலில் கூட கட்சிகளையும், பதவிகளையும் நான் விரும்ப மாட்டேன்.

காலத்தின் கட்டளையை நான் மறுக்கமாட்டேன் என்ற வரியை சிரித்துக்கொண்டே பாடி அரசியலில் வருவதற்கு அப்போதே ஹிண்ட் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த். தன் நடிப்பாலும் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்று சூப்பர் ஸ்டார் ஆக நடிகர் ரஜினிகாந்த் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை ரஜினியிடம் கமர்ஷியல் படங்களை விட்டு வேறு பாணியில் நடிக்கலாமே என்று கேட்டனர். அதற்கு ரஜினி எல்லாம் எனக்கு தெரியும் என்பது போல் செய்கை செய்தாராம்.

இதனிடையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில் கடைசியாக அரசியலுக்கு இனி வரவே மாட்டேன் என ரஜினி எழுதிய கொடுத்துவிட்டார். உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகினாலும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலர் தங்களை ஏமாற்றி விட்டதாகவே நினைக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Categories

Tech |