Categories
உலக செய்திகள்

என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்…. ஐ.நா. கவுன்சிலில் சேர முயற்சி செய்யும் இந்தியா….. இலங்கை அதிபர் தகவல்….!!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு என்றும்  நாங்கள் ஆதரவளிப்போம்  என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷின்சோ  அபே  உயிரிழந்தார். இவரின் இறுதிச் சடங்கு டோக்கியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பின்னர் அவர் அந்நாட்டு  வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து  அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில்  எங்களுக்கு அளிக்கும் ஆதரவிற்கு அதிபர் அணில் விக்ரமசிங் நன்றி  தெரிவித்தார். மேலும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு  இலங்கை ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள  எங்களுக்கு  கடன் அளிக்கும் முக்கிய நாடாக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளது.

இது தவிர சீனா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் உதவி  அளிக்கிறது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5  நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக  உள்ளது. மேலும் ஐ.நா. பொது சபையால் 2  ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளது. மேலும் நிரந்தர உறுப்பு நாடுகள்   வீட்டோ அதிகாரத்தை கொண்டிருப்பதால் ஐ.நா.வின் முக்கிய தீர்மானத்தைக் இந்த  நாடுகளால் தடுக்க முடியும். இதனையடுத்து தற்காலிக உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் பதவிக்காலம்  வருகின்ற டிசம்பரில் முடிவடையுள்ளது. மேலும் ஐ.நா.வில் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை  மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒழித்து வருகிறது. இந்த விவாகரத்தில் முன்னணியில் உள்ள இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக தொடர் முயற்சிகளை மேற்கொள்கிறது. தற்போதைய கட்டமைப்பின் படி அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் பாதுகாப்பு கவுன்சிலில்  இல்லை. இது தவறானது அநீதியானது என்று இந்தியா கூறிய வருகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |