Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என் அக்காவை கொன்னுட்டீயே…! மாமாவை கொலை செய்த மச்சான்… திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முதல் மனைவியை கொலை செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவியின் தம்பி மாமாவை வெட்டி கொலை செய்திருக்கிறார்.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணி:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் குமரன்.30வயதுடைய இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெட்டி கொலை செய்த நிலையில் இருந்த குமரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது திருப்பத்தூர் அடுத்த அநேரி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் குமரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில், முதல் மனைவியை கடந்த 2014ஆண்டு அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. கட்டிய மனைவியை அடித்து கொலை செய்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், குமரன் ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் குமரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முதல் மனைவியின் கொலை வழக்கு தொடர்பாக குமரனுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நோக்கத்தில், முதல் மனைவியின் தம்பி ராஜீ குமரன் தங்கியுள்ள ஏலகிரி கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கு குமரனை தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அக்கா உயிரிழந்தது தொடர்பாக தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில், தீர்ப்பு குமரனுக்கு சாதகமாக அமைய இருப்பதை அறிந்து கொண்ட ராஜீ குமரனை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குமரனை வெட்டி கொலை செய்த ராஜீயை கைது செய்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |