நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது .
தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் ‘தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.