அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், என் அன்புக்குரிய மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.