Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் அப்பாவை இறக்கி விடுங்க” விபத்துக்குள்ளான மொபட்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாய் குறுக்கே வந்ததால் மொபட் விபத்துக்குள்ளாகி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் பரமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் தீ விபத்து ஏற்பட்ட ஒரு தென்னை நார் தொழிற்சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மொபட்டில் அவ்வழியாக சென்றுள்ளார். அவரிடம் தனது தந்தையை நார் தொழிற்சாலையில் இறக்கி விடுமாறு மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் மோகன்ராஜ் தனது மொபட்டில் பரமனை ஏற்றி சென்றுள்ளார்.

இந்நிலையில் சாலையில் குறுக்கே சென்ற நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோகன்ராஜ் சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த மோகன்ராஜ் மற்றும் பரமன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரமன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |