தமிழில் காதல்தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ள தபு, தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக உள்ளார். நடிகை தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தன் சொந்த வாழ்க்கை பற்றி தபு பேட்டி அளித்ததாவது “பள்ளியில் படித்த போது பாத்திமா என்பது தான் என் குடும்ப பெயர். எனது தந்தையின் குடும்பபெயரை பயன்படுத்துவது முக்கியம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டது தபு என்ற எனது சினிமா பெயரைத் தான்.
எனக்கு என்னுடைய தந்தை சம்பந்தப்பட்ட நினைவுகள் எதுவுமில்லை. அவர் நான் சிறுமியாக இருந்தபோதே பிரிந்து சென்றுவிட்டார். என் சகோதரி பராநாஜ் மட்டும் அடிக்கடி சென்று அவரை சந்திப்பார். எனினும் நான் எப்போதும் அவரை சந்திக்க விரும்பியது இல்லை. அவரை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூட எனக்கு கிடையாது. நான் என் வாழ்க்கையில் நல்ல படியாக செட்டிலாகி இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று கூறினார்.