மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள்.
எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு அன்பு கிடைக்கும், ஆனால் எனது மகளுக்கு ஒரு தந்தை கிடைக்கமாட்டார் என கூறுவார். இப்போது என் அம்மாவுக்கு நான் ஒரு துணையை கண்டுபிடித்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.