Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் அம்மா சொன்னது சரிதான்”… ஐபிஎல் ஏலம் குறித்து … ட்விட்டரில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக்…!!

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.

16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் 15 கோடிக்கும், ரிலே மெரிடித் 8 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதிக தொகைக்கு வேகப் பந்துவீச்சாளர்கள் வாங்கப்படுவதை கிரிக்கெட் வீரர்கள்  நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் தன் ட்விட்டர் பக்கத்தில் “என்னை வேகப்பந்து வீச்சாளராக ஆகும்படி என் அம்மா கூறினார். ஆனால் என் தந்தை கூறியதை நான் கேட்டேன். எனினும் என் அம்மாவிற்கு தனி வியூகம் இருந்திருக்கிறது. அது சரி, அப்படித்தானே!” என்று பதிவிட்டிருந்தார். இதேபோன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் “என்னிடம் நீ ஏன் பந்துவீச்சாளராக ஆகவில்லை” என்று என் காதலி சாரா கேட்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |