மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசிய ஜான்வி கபூர், “என் அம்மா (ஸ்ரீதேவி) 13 வயதில் அப்பாவுடன் ஹீரோயினாகவும், 21 வயதில் மகனுக்கு அடுத்தபடியாகவும் நடித்தார். அப்படி செய்வது மிகவும் தவறு என்று நான் உணர்கிறேன். என் அம்மா வேலை செய்ய விரும்பிய அனைத்து நடிகர்களும் அவளுடைய வயது இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
Categories