Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என் ஆசை இதுதான்….. ரொம்ப டேஞ்சர்….. “கோலி பார்முக்கு வர கூடாது”….. பயப்படும் முன்னாள் பாக் வீரர்..!!

கோலி பழைய பார்முக்கு திரும்பி விட்டார் என்றால் மிகவும் ஆபத்தானராக மாறிவிடுவார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்த தொடர் 20 ஓவராக நடைபெறுகிறது. இந்த தொடரில்  விளையாடும் 6 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.. அதேபோல இந்திய அணியின் சார்பாக விளையாடும் 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக கேஎல் ராகுலும் செயல்படுகின்றனர். விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார்.. இதில் இந்திய அணி முதலாவதாக 28ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் பரம எதிரியாக கருதப்படுவதால் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கடைசியாக இந்த இரண்டு அணிகளும் 2021 உலக கோப்பையில் போட்டியில் மோதின. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமில்லாமல்,  உலக கோப்பையில் முதல் முறையாக வென்று சரித்திரத்தை மாற்றி எழுதியது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குவதால் தக்க பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் 7 ஆசிய கோப்பைகளை வென்று முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, கடைசியாக நடந்த 2018 ஆசியக் கோப்பையும் வென்று சாம்பியனாக இருக்கிறது. இதனால் இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று பார்க்கப்படுகிறது. மேலும் டி20 உலக கோப்பையில் விளையாட போகும் அணி வீரர்களை இந்த ஆசிய கோப்பையை வைத்து தான் தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் 2019 க்கு பின் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் விராட் கோலி சுமாராகவே செயல்பட்டு வருவார். இவர் பார்மை இழந்து சதம் அடிக்க முடியாமல் சமீபத்திய ஐ.பி.எல் தொடரில் மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆனார்.. அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சுமாராகவே செயல்பட்டு வருகிறார்..  இதனை வைத்து இவரை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் விராட் கோலிக்கு ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்கு இந்த ஆசிய கோப்பை அவருக்கு முக்கியம்.. எனவே இந்த ஆசிய கோப்பையில் கட்டாயமாக அவர் சிறப்பாக ஆடி பழைய கோலியாக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் உடைத்துவிட்டு டி20 உலக கோப்பையில் விராட் கோலி இடம் பிடிக்க இந்த ஆசிய கோப்பையில் அவர் சிறப்பாக ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஃபார்முக்கு வந்து விடாமல் பெரிய அளவில் ரன்களை சேர்த்து விடக் கூடாது என்று அவருடைய நாட்டுப் பற்றுடன் பேசியிருக்கிறார்.

இது பற்றி அவர் பேசியதாவது, “விராட் கோலி டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் கட்டாயமாக ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடி கம் பேக் கொடுக்க வேண்டும். எனவே அவர் அணியில் ஆழமாக கொக்கி போடும் வகையில் மிக அழுத்தமான செயல்பாட்டை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் அணியில் அவரைப் போன்ற ஒரு பெரிய வீரரை வெறுமனே வைத்திருந்து, பின் பெஞ்சில் அமர வைப்பது ஒரு கடினமான முடிவு. இருப்பினும் சுமாரான பார்மிலேயே கோலி தொடர வேண்டும் என பாகிஸ்தான் நம்புகிறது. ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு வீரர் பழைய பார்முக்கு திரும்பி விட்டார் என்றால் மிகவும் ஆபத்தானராக மாறிவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |