Categories
உலக செய்திகள்

“என் இதயம் வலிக்கிறது”… குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கு…. பிரபல பாடகியின் பதிவு…!!!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி   பிரபல பாடகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டிருப்பது  அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதயம் உடைந்து போனது. இந்த அழகான குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நேர்ந்ததை கேட்டதிலிருந்து நான் மிகவும் உணர்ச்சி மயமாகி அழுது  கொண்டிருக்கின்றேன்.

நாடு முழுவதும் நடைபெறுகின்ற இத்தகைய வன்முறை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பலருடன் நானும் இணைந்து கோருகிறேன். மேலும் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றேன். இதை நினைத்தால் நமது குழந்தைகளையும் நமக்கு அன்பானவர்களையும்  எண்ணி பயமாக இருக்கிறது. இந்த நிலையில் பள்ளிக்கு தினமும் குழந்தைகளை அனுப்புவதற்கு நாம் அனைவருக்கும் பயமாகத்தான் இருக்கின்றது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்த செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்  என் இதயம் வலிக்கிறது என தெரிவித்திருக்கின்றார்

Categories

Tech |