தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (ஆகஸ்ட் 25ஆம்) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :
முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான @iVijayakant அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) August 25, 2022
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து :
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், @iVijayakant அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். pic.twitter.com/QPQLoKDIlV
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 25, 2022
ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து :
ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது 71-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனதருமை நண்பரும், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
@iVijayakant அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கட்பணியாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 25, 2022
பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து :
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் திரு @iVijayakant அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். pic.twitter.com/3RiM6T9ncg
— K.Annamalai (@annamalai_k) August 25, 2022
எம்.பி கனிமொழி வாழ்த்து :
திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். pic.twitter.com/pzVaoRv22k
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 25, 2022
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து :
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
"வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும்(1/2)@iVijayakant#HBDVijayakant
(File Photo) pic.twitter.com/qPzcQYqWDX— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2022
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து :
இன்று பிறந்தநாள் காணும் ஆருயிர் நண்பரும், உடன்பிறவா சகோதரரும், தேமுதிக தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று, மென்மேலும் பல வெற்றிகள் கண்டு மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் ஆருயிர் நண்பரும், உடன்பிறவா சகோதரரும், தேமுதிக தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று, மென்மேலும் பல வெற்றிகள் கண்டு மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். @iVijayakant pic.twitter.com/LhJhUaALcO
— R Sarath Kumar (@realsarathkumar) August 25, 2022
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து :
இன்று 70ஆவது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
இன்று 70ஆவது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் @iVijaykanth அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 25, 2022