காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்ராவுக்கு பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தனிப்பட்ட தாக்குதல் மூலம் தனது இமேஜை சேதப்படுத்த பாஜக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசம், இந்தூரில் நடந்த யாத்ராவில் பேசிய ராகுல் காந்தி, உண்மை தன்னிடம் இருப்பதாகவும், பாஜக எது செய்தாலும் அது தனக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறினார்.