வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா தனது தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை இனி நான் அந்தப்பக்கம் வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி கொண்டிருக்கும் போதே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.
வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இவர் அங்கிருக்கும் குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என்று பெயர் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்தியா போலீசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தா அங்கு இருந்து கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் பக்தர்களுக்காக பேசி நித்யானந்தா கைலாஷ் அதற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
அதேபோன்ற தன்னுடைய மரணத்திற்கு பின்னால் தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டதாகவும் தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் குரு பரம்பரைக்கு தான் சென்று சேரும் என்று நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தமிழகத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, தமிழகத்திற்கு இனிமேல் வரப்போவதில்லை தமிழக ஊடகங்களை பொருத்தவரை நான் இறந்துவிட்டேன் நான் இறந்தாலும் தனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறி முடித்துள்ளார்.