சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போராட்ட களத்தில் தான் என் உயிரும் உள்ளமும் உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது.
அதன் காரணமாக கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு தனியே 20 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று சென்னையில் இன்று வன்னியர் சங்க போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ரயில் மீது கல்லெறிந்து தடுத்து நிறுத்துவதும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்காக பாமகவினர் போராட்டம் என்கிற பெயரில் பொது சொத்துக்களை சூறையாடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது. உயிரும் உள்ளமும் சென்னை போராட்டக் களத்தில்தான் உள்ளன’என்று அவர் கூறியுள்ளார்.