Categories
சினிமா

“என் எதிர் வீட்டில் நடந்த கதை” விருமன் படத்தின் கதை பற்றி மனம் திறக்கிறார் இயக்குனர் முத்தையா….!!

கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கார்த்தி கிராமத்து நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகரான அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் விருமன் படத்தின் கதை பற்றிய தகவல்களை உற்சாகமாக பகிர்ந்துள்ளார் இயக்குநர் முத்தையா. இந்த படம் குறித்து இயக்குனர் முத்தையா கூறியதாவது, “என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” எனக் கூறியுள்ளார் டைரக்டர் முத்தையா.

Categories

Tech |