Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்.எல்.சி. திடீர் மரணம்….. உறவினர்கள் போராட்டம்….. கடலூரில் பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் மன்னார்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி 19 வட்டம் என்எல்சி குடியிருப்பில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி நிரந்தர தொழிலாளி ஆவார். கணேசன் நேற்று முன் தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2 வது சங்கத்திற்கு சென்றார். அப்போது சுரங்க நுழைவாயில் விரல் ரேகை பதிவு செய்துவிட்டு சுரங்கத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அவரை மிட்டு சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி அறிந்த கணேசனின் உறவினர்கள் என்.எல்.சி. 2 வது சுரங்கம் முன் திரண்டனர்.

அதனை தொடர்ந்து இறந்த கணேசனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த என்எல்சி நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச. மற்றும் அண்ணா தொ.மு.ச. ஆகிய தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அந்த பேச்சுவார்த்தையில் 3 மாதத்திற்குள் கணேசனின் குடும்பத்தில் அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து கணேசனின் உறவினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தினர் அமைதியாக கலந்து சென்றனர்.

Categories

Tech |