Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கணவரை காணவில்லை” மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குட்டையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  திருநந்திக்கரை வாழைவிளை பகுதியில்   முதியவரான  பூயன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.  கடந்த 23-ஆம் தேதி பூயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பூயன்  வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா  பூயனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் பூயன் கிடைக்கவில்லை.  இந்நிலையில்  நேற்று ஐத்துளிமலை கல்குவாரி பகுதியில் அமைந்துள்ள குட்டையில் பூயன்  இறந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பூயனின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூயன்   எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |