Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவரை கொன்னுட்டாங்க… எங்களையும் கொல்ல பாக்குறாங்க… கலெக்டரிடம் கதறி அழுத பெண்…!!

மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் வாசு ஆகியோர் சொத்து தொடர்பாக கார்த்திக்குடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடந்த தகராறில் கண்ணன் குடும்பத்தினர் கர்ப்பிணியான சிவபிரியாவை தாக்கியுள்ளனர். இதனால் சிவப்பிரியா மயிலாடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதியன்று சிவபிரியாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அப்போது கார்த்திக்கின் உறவினர்கள் மருத்துவமனையிலிருந்த சிவபிரியாவிடம் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவப்பிரியா வீட்டில் வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், கார்த்திக்கின் லாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்ற அனைத்துமே காணாமல் போயுள்ளது. இதனால் சிவப்பிரியா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று புகார் அளித்துள்ளார். அதில் என் கணவரை, கண்ணன் குடும்பத்தினர் கொலை செய்து அதனை தற்கொலையாக மாற்றி அடக்கம் செய்ததோடு தன் உடமைகளையும்  திருடி சென்று விட்டதாக கூறியிருந்தார்.

மேலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில் மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் சிவப்பிரியா தன் குழந்தையுடன் வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன் கணவரின் உறவினர்கள் கணவரின் சொத்தை அபகரிப்பதற்காக தன்னையும் குழந்தைகளையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கோரியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |