டேராடூனில் தீபக்-ஜோதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார்.
இந்த நிலையில் கணவரின் மரணத்தால் சற்றும் மனம் தளராத அவரின் மனைவி ஜோதி, தன் கணவரை போல் தாமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தன்னுடைய விடாமுயற்சியால் தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஜோதி, என் தாய், தந்தை வழியில் ராணுவப் பணியில் சேரும் முதல் நபர் நான்தான்.
மேலும் என்னுடைய முயற்சிக்கு எனது கணவர் பணிபுரிந்த படைப்பிரிவினர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். டேராடூனில் இல்லத்தரசியாக இருந்த நான் தற்போது “ராணுவ அதிகாரி” என்று பெருமையாக கூறினார். மேலும் இவருடைய குழந்தைகள் தந்தை போல தாயும் ஒரு ராணுவ அதிகாரி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.