பெலகாவி என்ற பகுதியில் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்த விதவைப் பெண்ணிடம் தாசில்தார் தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாவட்டம் பெலகாவி என்ற பகுதியை சேர்ந்த விதவைப் பெண்ணின் மகன் அங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாராக பணியாற்றி வரும் டி எஸ் ஜெயராஜ் என்பவரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து அவரது தாயுடன் வருமாறு கூறி அனுப்பி விட்டார். மறுநாள் அந்த பெண் அலுவலகம் சென்று இருந்தபோது அவர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசியது மட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செய்வதறியாமல் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்துள்ளா.ர் நடந்ததை மகனிடம் தெரிவிக்க, அவர் அலுவலகத்திற்கு வெளியில் நின்று ஆவேசமாக பேசி போராட்டம் நடத்தினார். பின்னர் அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். அதுமட்டுமில்லாமல் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.