Categories
தேசிய செய்திகள்

“என் கணவர் சாகவில்லை….. கோமாவில் இருக்கிறார்”…. 18 மாதங்களாக இறந்த உடலுடன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

18 மாதங்களுக்கு முன்பு தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலுடன் ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுக் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பலர் உயிரிழந்தனர். அதேபோன்று கொரோனா தொற்று இரண்டாவது அலையில் உயிரிழந்தவர் தான் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த விம்லேஷ்குமார். வருமானவரித்துறை அதிகாரியாக இருந்த இவர் கடந்த ஆண்டு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். இவரின் குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு தொடர்பாக மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் இவரின் குடும்பத்தினர் மற்றும் மனைவி தனது கணவர் விமலேஷ் உயிரிழக்கவில்லை, அவர் கோமாவில் இருக்கிறார் என்று நம்பி வீட்டில் அவரது உடலை அடக்கம் செய்யாமல் பாதுகாத்து வந்துள்ளனர். வீட்டில் ஒரு அறையில் அவரின் உடலை வைத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் அந்த உடலுடன் 18 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். விம்லேஷ்குமார் உயிரிழந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது கூட தனது கணவர் உயிரிழக்கவில்லை கோமாவில் தான் இருக்கிறார் என்று கூறிவந்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டரையும் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்த போது அவரது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக எந்த ஒரு ஆவணங்களும் முன்னேற்றம் இல்லாமல் அப்படியே இருப்பதாக தகவல் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வருமானவரித்துறை ஊழியர்கள் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போதுதான் விம்லேஷ்குமார்  உயிருடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் நம்பிக் கொண்டு அழுகிய நிலையில் உள்ள உடலை பாதுகாத்து வைத்திருந்தனர் என்று தெரியவந்தது. பின்னர் உடலை மீட்டு அதிகாரிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விம்லேஷ்குமாரின் மனைவியிடம் இதுகுறித்து விசாரணை செய்த போது தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |