தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த போது அர்னவ் கட்டாயப்படுத்தியதால் முஸ்லீமாக இருந்த திவ்யா இந்துவாக மாறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அர்னவ் மற்றும் திவ்யாவுக்கு திருமணம் நடந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு தங்களுக்கு திருமணம் முடிந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது எனவும் ஏற்கனவே பதிவேற்றம் செய்த போட்டோக்களை டெலிட் செய்யும்படியும் அர்னவ் திவ்யாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோன்று செல்லம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அர்ஷித்தாவுடன், அர்னவ் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி தன் கண்முன்னே தன்னுடைய கணவர் அன்ஷித்தாவ்க்கு பலமுறை ஐ லவ் யூ என்று சொல்லி கிஸ் கொடுத்ததாகவும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாகத்தான் தங்களுக்கு திருமணம் முடிந்த புகைப்படங்களை திவ்யா வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை எடுக்க வலியுறுத்திய அர்ணவ், ஒரு கட்டத்தில் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டது திவ்யாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அர்ஷித்தா மற்றும் அர்னவ் ஒன்றாக இருந்ததை பார்த்த திவ்யா அவர்களிடம் சென்று நியாயம் கேட்டபோது அர்ஷித்தா திவ்யாவை தண்ணீர் பாட்டிலால் கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவரை தாக்கி, வயிற்றிலேயே குழந்தை இறந்து போக வேண்டும் என்று சாபம் விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அன்ஷித்தாவுடன் வாக்குவாதம் முற்றியதால் போது ஆத்திரமடைந்த அர்னவ் அவருடைய வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளி இருக்கிறார். இதனால் திவ்யாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் கூறிய திவ்யா சென்னை பெருநகர காவல் ஆணையத்தில் கண்ணீர் மல்க அர்னவ் மீது புகார் கொடுத்துள்ளார்.