ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஒரு வீரராக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில் மேக்ஸ்வெல் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் விராட் கோலியுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட மன உளைச்சலினால் கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறிய போது விராட் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். என்னுடைய முடிவை அவர்ஆதரித்தார். அத்தோடு நான் படும் கஷ்டங்களையும் நன்கு புரிந்து கொண்டார். எனக்கு ஏற்பட்ட அழுத்தம் மற்றும் ஏதிர்பார்ப்புகளை அவருடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது.
ஐபிஎல் போட்டியில் விராட் கோலியுடன் விளையாடுவதற்கும் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். விராட் டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வருவதால் ஆட்டத்தின் உச்சத்தில் இருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். அதோடு விராட் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாட்டை விளையாடுவதோடு மட்டுமல்லாமல் அதனால் வரும் எதிர்ப்புகளையும் அழகாக சமாளிக்கிறார்.
இதனால் தான் இந்திய அணியின் கேப்டன் தகுதி இவருக்கு உள்ளது என்றும் கூறினார். கிரிக்கெட் விளையாட்டில் நீண்ட காலமாக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் விராட். இந்திய கேப்டனான விராட் கோலியின் குணநலன்களை கற்றுக்கொள்வதற்கு மேக்ஸ்வெல் ஆசைப்படுகிறார். 32 வயதான மேக்ஸ்வெல் விளையாட்டு போட்டி மட்டுமல்லாது விரட்டின் வாழ்க்கை முறை மற்றும் பயிற்சிகளையும் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன் எனவும் அதை நான் பின்பற்றுவேன் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.